மதிப்புறு சாதனைத் தமிழன்
மரியசேவியர் அடிகளார்
கலை மலை ஒன்று சரிந்தது கனத்த இதயத்துடன் நாம் .
ஈழத்து அரங்க வரலாறு இன்று ஒரு பேராளுமையை இழந்து நிற்கிறது.திருமறைக் கலாமன்றம் எனும் பெரு நிறுவனத்தின் தந்தை .யாழ்ப்பாணத்தில் உருவாகிய இந்த தமிழ் கலை ஆற்றுகை நிறுவனம் ஈழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டு அந்த அந்த பிரதேசத்தின் கலை வளச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றமையும் உலகில் தமிழ்ர் வாழும் இடங்களிலும் கிளைகள் அமைத்து அவற்றின் மூலம் கலைப் பணி ஆற்றுகின்றமையும் இந்த பெரும் கலைப் பயணத்தில் பின்னணியாக இருந்து செயல்பட்டவர் மரியசேவியர் அடிகளார்.
ஈழத்தில் இருந்த காலத்தில் அடிகளாரை அடிக்கடி சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டமையும் அவர் அன்பில் மகிழ்ந்தமையும் என்றும் மாறா நினைவுகளாய்.
இரண்டு வருடங்களுக்கு முன் உலக நாடக விழாவில் அவரை சந்தித்தமையும் பின்னர் லண்டன் திருமுறைக் கலாமன்ற நிகழ்விலும் அவரை சந்தித்த போது அவர் காட்டிய அன்பும் மறக்க முடியாத நினைவுகள்.
ஈழத்தமிழர்களுக்கான தேசிய கலை வடிவம் என்ற நோக்கில் ஈழத்து கூத்து மரபு அதன் செழுமை பற்றிய ஆய்வு ஆற்றுகை என்பவற்றில் தீவிர அக்கறையுடன் செயல் பட்டவர் அடிகளார்.
என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்
பாலசுகுமார்