பேரழகு பொருந்திய மங்கை தான் நிலவோ…. சுடர்விழியால் இவனை தீண்டி அணைத்துக் கொண்டாளோ நிலா மங்கை…. இதன் வெளிப்பாடு இவனது இசையோ… இவனது இசையில் மயங்கி பிறைதேடும் பனித்துளி போல் பரவசத்தில் நாணுகிறாள்… நிலவு எனும் தூயசொருபிணி நித்தம் வருவது இவனது இசைக்காகவா! இவனது அழகிற்காகவா! நிலவே இவனிடம் மயங்கும்போது இவனை ஈன்ற தாய் நான் என்ன! நாம் என்ன!
கவிதை: உஷா விஜயராகவன் | கலை: தன்யஸ்ரீ
நன்றி : கவிக்குயில்.காம்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW