முக்கிய பொருட்கள்:-
3/4 கப் பாசிப் பருப்பு
பிரதான உணவு
1/4 கப் அரிசி
1 தக்காளி
1 கப் கேரட்
1 கப் முட்டைக்கோசு
1 கப் பட்டாணி
1/2 கப் குடை மிளகாய்
1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி நெய்
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மிளகாய் பொடி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
தேவையான அளவு பெருங்காயம்
1 தேக்கரண்டி சீரகம்
Step 1:
ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கோங்க. அதிலேயே கழுவிய அரிசியை சேர்த்து தேயைான அளவு தண்ணீரை விடுங்கள். அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் உப்பையும் மஞ்சளையும் அதில் சேர்த்து, குக்கரை மூடி 6 முதல் 7 விசில் வரும் வரை வேகவிடுங்க.
Step 2:
ஒரு பேனில் நெய் விட்டு, அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போது இதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸை சேர்த்து வதக்குங்க. பிறகு பச்சை பட்டாணியும் சேர்த்து தொடர்ந்து வதக்குங்க.
Step 3:
இப்போது இந்த கலவைல நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்து வதக்குங்க. காய்கஙிகள் எல்லாம் நல்லா வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கோங்க. பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு சிகப்பு மிளகாய்த் தூள் ஆகிய பொருட்களை போட்டு எல்லா பொருட்களை நல்லா கலந்துவிட்டு மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடுங்க.
Step 4:
இப்போது ஏற்கனவே குக்கரில் வேகவைத்து வைச்சிருக்குற அரிசி பருப்பு கலவையை குக்கர் ஆறியதும் திறந்து, அதில் நாம தயாரிச்சு வெச்சிருக்கிற காய்கறி மசாலா கலவையை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.
Step 5:
சூடாக இருக்கும்போதே மேலாக 1 ஸ்பூன் நெய்யை விட்டு கலந்து சூடாக பரிமாறுங்க.
நன்றி-டுடே நியூஸ்