செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா?

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா?

2 minutes read

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமா? எனில் இதோ இந்த ஈசியான ஸ்டெப்ஸ்களை பாருங்கள். உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

ஃபிரிட்ஜ் இல்லாவிட்டால் சமையலில் பாதி வேலைகள் நடைபெறாது. சமையலுக்கு தேவையான மாவு, காய்கறிகள், கீரை வகைகள், பால், இறைச்சி, மீன், முட்டை, கறிவேப்பிலை, மல்லித்தழை என சமையலுக்கு உதவும் மொத்த பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைத்திருப்போம். அதுமட்டுமின்றி மிச்சமாகும் உணவுகளையும் வைத்துக்கொள்வோம். எனவே காலை முதல் இரவு வரை நமக்கும் ஃபிரிட்ஜ்க்குமான தொடர்பு அதிகம். ஃபிரிட்ஜ் இல்லாவிட்டால் அந்த நாளே ஓடாது. குறிப்பாக வெயில் காலத்தில் கட்டாயம் நாம் பழச்சாறுகளை பருகினால்தான் வெயிலை விரட்டியடிக்க முடியும். கொஞ்சமாகவேணும் பழச்சாறுகளை குளுமையாக பருகினால்தான் நன்றாக இருக்கும். எனவே அதற்கும் நமக்கு ஃபிரிட்ஜ் அதிக தேவையாக உள்ளது. வீட்டில் ஃபிரிட்ஜோ அல்லது மிக்ஸியோ பழுதாகிவிட்டால், அவ்வளவுதான் நம்மால் சமைக்கவே முடியாது.

அதுபோல் ஃபிரிட்ஜ் உங்களை கைவிட்டுவிடாமல் இருக்கவேண்டுமெனில் நீங்கள் ஃபிரிட்ஜை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்போது பழுதாகி உங்களை கவலைக்குள்ளாகும் என்று கூறமுடியாது. எனவே ஃபிரிட்ஜை நீங்கள் மாதத்தில் ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் அதில் வைக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கிவிடும்.

ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்யவேண்டும்?
ஃபிரிட்ஜில் எப்போது வாரத்திற்கு ஒருமுறை ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி அப்படியே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் அது ஃபிரிட்ஜில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்கும்.

உங்கள் ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டுமெனில் மாதத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய சரியான நேரமாக ஃபிரிட்ஜில் குறைவாகப் பொருட்கள் இருக்கும் நேரம்தான் உகந்தது. அப்போதுதான் நீங்கள் எளிதாக அதை சுத்தம் செய்துவிட முடியும்.

ஃபிரிட்ஜை எப்போது சுத்தம் செய்யவேண்டும்?
சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் ஃபிரிட்ஜை அணைத்துவிடவேண்டும். ஸ்டெபிளைசரின் மின் இணைப்பை துண்டித்துவிடவேண்டும். இதனால் ஃபீரீசர் மற்றும் ஃப்ரிட்ஜில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

இப்போது ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே வைத்துவிடவேண்டும். ஒவ்வொரு தட்டிலுமே உள்ள பொருட்களை தனித்தனியே எடுத்து வைக்கவேண்டும். அப்போதுதான் அந்தந்த தட்டில் நீங்கள் மீண்டும் சரியாக அடுக்க ஏதுவாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் உள்ள தட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக கழற்ற வேண்டும். அவ்வாறே ஃபிரிட்ஜ் டோரில் உள்ள கண்டெய்னர்களையும் அகற்றவேண்டும். இதை வாஷிங் ஜெல் போட்டு சுத்தம் செய்து நன்றாக காய வைத்து கழுவி வைக்கவேண்டும்.

ஃபிரிட்ஜை எப்படி சுத்தம் செய்யவேண்டும்?
ஃபிரிட்ஜ் முழுவதும் காலி செய்துவிட்டு, வாஷிங் ஜெல்லை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து, ஸ்பான்ச் நாரில் முழுவதும் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்துவிட்டு, அடுத்து காய்நத டவலில் துடைக்கவேண்டும். உள்ளே ஈரம் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு, திறந்து வைக்கவேண்டும்.

ஃபிரிட்ஜின் வெளிப்புறம் தண்ணீரை ஸ்பிரேயர் வைத்து ஸ்பிரே செய்து துடைத்து எடுக்கவேண்டும்.

ப்ரிட்ஜை ஒரு மணி நேரம் திறந்து வைத்து நன்றாக உலர்ந்த பின்னர், அதில் உள்ளவற்றை ப்ளேட்கள் மற்றும் சைட் டோரில் உள்ள கண்டெய்னர்களை பொறுத்தி, பொருட்களை அடுக்க வேண்டும். உங்கள் ஃபிரிட்ஜ் பளபளப்பாக இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.