இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரையும் எந்த நேரத்திலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது.
அதிலும் மார்பக புற்றுநோய் கடந்த சில வருடங்களாக அதிகளவில் பரவுவதால் அதற்கான விழிப்புணர்வும் அவ்வபோது ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
யாரை எல்லாம் மார்பக புற்றுநோய் தாக்கலாம்?
40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்- சினைப்பை- பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால் பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்களை தாக்கும்.
குழந்தை பேறு இல்லாதவர்கள்
தாய்ப்பால் புகட்டாதவர்கள்
11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்.
கருப்பையை நீக்கியவர்கள்
மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக் கொண்டவர்கள்.
உடல் குண்டானவர்கள் – ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரையும் எந்த நேரத்திலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது.அதிலும் மார்பக புற்றுநோய் கடந்த சில வருடங்களாக அதிகளவில் பரவுவதால் அதற்கான விழிப்புணர்வும் அவ்வபோது ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தமிழ் தகவல்