செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரித்தானிய தமிழரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையத்தின் புதிய பரிணாமம்

பிரித்தானிய தமிழரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையத்தின் புதிய பரிணாமம்

5 minutes read

 

பிரித்தானிய தமிழ் தொழில் முனைவரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையம் ஓன்று புதுப்பொலிவுடன் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது இலண்டனில் வாழும் திரு குணா கருணா அவர்கள் EP ACADEMY என்னும் உயர் கல்வி நிறுவனத்தினை கடந்த 7 வருடங்களாக நடாத்திவருகின்றார்.

 

மேற்படி புதிய நிலையத்தின் திறப்புவிழாவில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தேவராஜா, ATC நிறுவனர் மற்றும் சமாதான நீதவான் அருட்ச்செல்வம், யாழ் இந்துக்கல்லூரி அதிபர் செந்தில்மாறன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் அகிலன், விவசாய பேராசிரியர் திருக்குமார், யாழ் இந்துக்கல்லூரி பழையமானவர் சங்க பிரித்தானிய தலைவர் கிருபாகரன், மருத்துவபீட பேராசிரியர் கண்ணதாசன், நிதியியல் ஆலோசகர் கோணேஸ்வரா மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வு தொடர்பாக விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையானது;

நாம் EPACADEMY கடந்த 2014 ம் ஆண்டு முதல் எம் மண்ணில் மாணவர்களின் திறன்மிகு கல்வியினை பின்தொடர அயராது சேவையாற்றி வருகின்றோம்.

நாம் வடகிழக்கு மாகணங்களில் CIMA கற்கை நெறிகளையையும் பரீட்சைகளையும் நடாத்தும் CIMA GLOBAL UK ஆல் அங்கிகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஆகும்..

நாம் மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பயனுள்ளதாக்க , வேலைவாய்ப்பில் தனித்துவமிக்க வகையான பல கற்கைநெறிகளை யாழ் மண்ணில் அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

மேலும் நாம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களது தொழில் வாய்ப்புக்களை இலகுவாக அடைய கூடிய பிற கற்கை நெறிகளையும் மிக வெற்றிகரமாக செயற்ப்படுத்தி வருகின்றோம். மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் சிறந்த கணணி மற்றும் தொழில் கல்விகளை வழங்குவது மாத்திரமன்றி இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கற்கை நெறிகளை தொடருவதற்கான அடிப்படை தேர்வுகளை நடாத்தி வருகின்றோம். (Approved VTA , TVEC Examinations)

மேலும் கொரோனா தொற்று காலத்திலும் மாணவர்களது கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் இணையத்தின் ஊடாக மிகவும் சிறந்த முறையில் கற்பித்து மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருந்து வருகின்றோம்.

எம் நிறுவனத்தால் வழங்கப்படும் கற்கை நெறிகள்

§  CIMA

§  Aircraft Maintenance Engineering & Training

§  IT Courses (TVEC & EPlus Examination)

§  Medical courses & Hospital Training

§  Diploma in English / IELTS

§  Degree pathway / International Transfer program

§  Study Aboard & Work visa

SQA என்பது Scottish Qualification Authority  ஆகும் .  இந்த கல்வி முறையானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல உயர்தரபட்ட கற்கை நெறிகளை சிறப்பாக வழங்கி வருகின்றது.

இலங்கையிலே SQA தகமை கற்கை நெறிகளை முழுமையாக கற்றுக்கொள்ளலாம், மற்றும் இங்கே ஆரம்ப கற்களை தொடர்ந்து பின்னர் உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொடரவும் முடியும்.

இங்கேயே ஆரம்ப தகமைகளை வளர்த்துக்கொள்வதால் மிகுதியான பணத்திணையும் சேமித்துக்கொள்ள முடியும்.

இங்கே உங்கள் கனவு கற்கை நெறிகளை மிகவும் இலகுவாகவும் நேர்த்தியாகவும் அடைவதற்கான சிறந்த முறையில் வழங்கப்படுகின்றது.

GCE Ordianry Level உடன் SQA வழங்கும் International Foundation ஊடாக கற்கை நெறிகளை தேர்ந்தெடுத்து கற்று தேர்ச்சி பெற்றால் பட்டக்கல்வியை தொடர்வதற்கான தகமையை உருவாக்கிட முடியும்.

GCE Advanced Level உடன் SQA மிக்க்குறுகிய காலத்திலே Specialised Diploma கற்கை நெறியை கற்று தேர்ச்சி பெறுவதன் மூலம் நேரடியாக ஓர் பட்டக்கல்வியின் இறுதியாண்டில் கல்வியை தொடர்வதற்கான தகமையை வளர்த்துக்கொள்ளலாம்.

பிரித்தானியாவில் தாதியர் வேலை வாய்ப்பு

இலங்கையில் இருந்து இப்பொழுது முழுக்கல்விதகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பிரத்தானியவிற்கு தாதியர் வேலைவாய்ப்பினை ஏற்படுத்து கின்றோம்.

இக்கற்கைநெறிகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள மிகவும் சிறப்பான சந்தர்பத்தை EP Academy வழங்குகின்றது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்…!!

என அந்த ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More