முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், தனது தாயின் நினைவாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். கரீமா பேகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாயின் நினைவால் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட இந்த உருக்கமான வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.