இன்றைய தினம் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் மின்தகன நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிறப்புமிக்க செயல்த்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அனைத்து மக்களின் பேராதரவுடன் திருநகர் மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கிளி பீப்பிள் மற்றும் கிளி மயான அபிவிருத்திக்குழு இணைந்து முன்னெடுத்த இத்திட்டத்துக்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் பொதுமக்கள் சுமார் 25 மில்லியன் ரூபாக்களை நன்கொடை வழங்கியிருந்தார்கள்.
கொரோனா பேரிடர் காரணமாக மின்தகனத்தின் தேவை உருவானதைத் தொடர்ந்து கிளிநொச்சி பிரதேசத்துக்கென தனியான மின் தகனம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பு வழங்கிய பெரு நன்கொடையாளர்கள், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். கிளி மக்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை விஜயராஜா இலண்டனிலிருந்து நேரடியா சென்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
இத்திட்டம் நிறைவடைந்ததும் கரச்சிப் பிரதேசசபை இந்த நிலையத்தை பரராமரிக்க உள்ளது.