இயக்குனர் மணிரத்னம் பல முன்னணி சினிமா பிரபலங்களை திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார். இவர் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை துளசி நாயரையும் அறிமுகப்படுத்தினார். அதே படத்தில் பாடகர் சித் ஸ்ரீராமையும் அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய அந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. குறிப்பாக அவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ” திரைபடத்தில் பாடிய என்னோடு நீ இருந்தால் பாடல் பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சிறந்த பிண்ணனி பாடகராக உள்ள சித் ஸ்ரீராம் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சித் ஸ்ரீராமை இதற்கு முன்பு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைப்பாளராக மணி ரத்னம் அறிமுக படுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் தற்போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.