தமிழகர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன் படி காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதேவேளை ஜல்லிகட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசொதனை செய்ய வேண்டும் என்பதுடன், தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.
அதேநேரம் காளைகள் அனைத்தும் கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவை உள்நாட்டின் காளை மாடுகள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய வேண்டும். மது போதையில் இருப்பவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.