இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இயக்குநராக புகழ் பெற்று, தற்போது நடிகராக வலம் வருபவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ராக்கி’. மேலும் சில படங்களில் நடித்து வரும் இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக லேசான அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக அவர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா சிகிச்சை பெற்று குணமடைந்து விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.