செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 23 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

4 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

நாளுக்கு நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் போரில் சிக்கிக் காயமடைபவர்களும் அதிகரித்துக் கொண்டே சென்றார்கள். இவர்களை அங்கிருந்த வசதிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கி காப்பாற்ற வேண்டிய தேவை இருந்தது. முக்கியமாக கடுமையாக சுகவீனமுற்றவர்களை வவுனியா பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் அழைத்து செல்வது நெடும் காலமாக வழக்கத்தில் இருந்தது.

2002ம் ஆண்டு சமாதானத்திக்கு முன்னரான தொடர்புகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தின் மடு அல்லது உயிலங்குளம் பகுதியினுாடாகவே இருந்தது. பின்னர் சமாதான காலப் பகுதியில் ஓமந்தை முகமாலை பாதைகள் திறக்கப்பட்டன. 2006ம் ஆண்டு காலப்பகுதியில் கடுமையான மோதலின் பின்னர் முகமாலை ஊடான யாழ்ப்பாணத்திற்க்கான பாதை திடிர் என்று துண்டிக்கப்பட்டு விட்டது. அதுவரை யாழ் பொது வைத்தியசாலைக்கும் வவுனியா பொது வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்தது. பின்னர் வவுனியா பொது வைத்தியாலைக்கு மாத்திரம் ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக நோயாளர்கள் அனுப்பபட்டனர்.

10153242_10204225634813785_4273013049810277101_n

ஓமந்தை பகுதியல் சுமார் நுறு மீற்றர் சூனிய பிரதேசத்தில் இரு பக்கத்திலும் புலிகளினதும் இராணுவத்தினரினதும் சோதனை சாவடிகள் அமைத்து அதன் ஊடாக பயணிக்கும் பயணிகளும், வாகனங்களும், பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பகல் வேளைகளில் மாத்திரம் ICRC அலுவலர்களின் அனுசரணையோடு திறந்து விடப்படும்’ இப்பாதை சரியாக மாலை 5.00 மணிக்கு பூட்டப்படும். 5.00 மணியாகின்ற சமயத்தில் இரு தரப்பினரும் திடீரென ஆயுதங்களை கையில் எடுத்தும் தலை கவசங்களை அணிந்தும் அவரவர் பகுதிகளில் பிரதான வீதியை பெரல்கள், தகரங்கள் , முட்கம்பிகள் என்பவற்றினால் ஒரு சில வினாடிகளில் அடைத்து விடுவார்கள். அச் சமயம் அவ் வழியாக பிரயாணிக்கும் போது உடனடியாக சண்டை தொடங்குமோ என்ற அச்சம் உணர்வு ஏற்ப்படும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொது வைத்தியசாலைகளில் இருந்து தினசரி நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் நோயாளிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பயணம் நெரிசல் மிக்கதாகவே இருந்தது. சோதனை சாவடியின் கடுமையான சோதனைக்குப் பின்னர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சென்றடைந்த நோயாளர் காவுவண்டி ஏற்கனவே சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்களை ஏற்றிக்கொண்டு வன்னிப்பகுதி நோக்கி பயணிக்கும்.

வன்னிப்பகுதியை நோக்கி போர் நெருங்கிக்கொண்டு வர ஓமந்தை சோதனை சாவடியின் புலிகள் பகுதி இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் நெடுங்கேணி பகுதியில் உள்ள நயினாமடு பகுதி சோதனை நடைபெறும் இடமாக மாற்றப்பட்டது. மேலும் யுத்தம் காரணமாக ஒட்டுசுட்டான் பகுதி சோதனை சாவடியாகக் காணப்பட்டது. இறுதியாக பொதுமக்கள் போக்குவரத்து சோதனைச்சவடியாக புதுக்குடியிருப்பு இருந்து ஒட்டுசுட்டான் நோக்கிய பாதையில் ஒரு கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது.

10616502_10204225634453776_40856116042500591_n

2009.01.22ந் திகதி அன்று இறுதியாக வன்னிப் பகுதியில் இருந்த ஒரேயொரு தரை வழிப்பாதை ஊடாக நோயாளர் காவுவண்டி வவுனியா நோக்கி சென்றது. பின்னர் நோயாளிகள் காயப்பட்டவர்கள் மாத்தளன் கடற்கரைப் பகுதியின் ஊடாக ICRC கப்பல் மூலம் வெளியேற்ற வேண்டி இருந்தது.

சிரமங்கள் மத்தியில் நோயாளிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் சாரதிகள் இரு பக்கங்களில் இருந்தும் கடுமையான மன அழுத்தங்களை எதிர் கொண்டனர். அத்துடன் கிளைமோர் பயம் வீதியிலும் காணப்பட்டது. பயணத்தை ஆரம்பிக்கும் சாரதிகள் உள்ளத்தில் சோர்வும் கவலையும் பயமும் காணப்பட்டது. அவர்கள் பத்திரமாக திரும்பி வந்த பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் வீடு செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

 

 

 

தொடரும்……….

 

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More