முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” அனந்த்நாக் சிர்ஹாமா பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி நிசார் தார் கொல்லப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்த்நாத் சிர்ஹாமா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது… இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.