செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

2 minutes read

வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரும் காலம் மகிழ்வையும் வளத்தையும் அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.

எல்லோரும் அன்புடனும் சமாதானத்துடனும் சமத்துவத்துடனும் இனிமையைப் பகிர்ந்து வாழ்கின்ற இனிய காலமாய் அமையப் பிரார்த்தனை.ஈழத் தமிழர்களின் வாழ்வை சூழ்ந்த இன்னல்கள் நீங்கி, விடுதலையும் சுதந்திரமும் கொண்ட வாழ்வு மலர இறையருளை வேண்டி நிற்கிறோம்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் (சித்திரை 1) தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றான இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகின்றது.

அனைவருக்கும் குரோதி புதுவருட வாழ்துக்கள் ! 

குரோதி என்ற பெயரைக் கொண்ட புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி,  13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.15 மணியளவிலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்றிரவு 9.04 மணியளவிலும் பிறக்கின்றது.

‘குரோதி’ வருடப்பிறப்பு 

சித்திரை புத்தாண்டு ‘குரோதி’ வருடமானது   13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது.

விஷு புண்ணியகாலம் 

13.04.2024 சனிக்கிழமை 

பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. 

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் 

மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள், சித்திரை, விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் ‍தேய்த்து ஸ்நானம் செய்து, தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

குரோதி வருட பலன்கள்

இவ்வருடம் முன்மழை அதிகமாகும். பின்மழை மத்திமமாகும். உணவுப் பொருள் விருத்திகள், கமத்தொழில், கைத்தொழில் போன்றவற்றில் லாபங்கள் அமையும்.

அரச சேவை திருப்திகரமானதாக அமையும். கல்வி மேன்மைகள் சிறப்படையும். பொருட்களின் விலை அதிகமாக அமையும். அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். 

கைவிஷேட நேரங்கள் 

14.04.2024 சித்திரை 1ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

காலை 07.57 மணி முதல் 09.56 மணி வரை.  

காலை 09.59 மணி முதல் நண்பகல் 12.01 மணி வரை. 

மாலை 06.17 மணி முதல் இரவு 08.17 மணி வரை. 

புது வியாபாரம் ஆரம்பிக்கும் நேரங்கள் 

15.04.2024 திங்கட்கிழமை 

காலை 09.08 மணி முதல் 09.51 மணி வரை. 

காலை 09.55 மணி முதல் 10.30 மணி வரை. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More