ஆர்.கே.நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இப்படத்தை ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நீது சந்திரா இப்படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை எக்ஸ்பிரசில் நடக்கும் கதையை மையக்கருவாக வைத்து படத்தை எடுக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கவுள்ளனர். இதற்காக தெற்கு ரெயில்வேயில் பிரத்யேகமாக அனுமதி வாங்கி படத்தின் முக்கிய காட்சிகளை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் படமாக்கவுள்ளனர்.
இப்படத்தில் ஆர்.கே. தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் முக்கிய அதிகாரியாக நடிக்கிறாராம். திரில்லர், காமெடி, செண்டிமெண்ட் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நாசர், ரமேஷ்கண்ணா, சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.