உலகின் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கூறிய விலைக்கு வாங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக ட்விட்டர், மஸ்க் மீது வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கு இன்னும் சில வாரங்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
தற்போது மஸ்க் அந்த ஒப்பந்தப்படி ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கப்போவதாக மீண்டும் உறுதி அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்திலேயே சமூக ஊடகத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்தார். எனினும் ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகள் தொடர்பில் மஸ்கிற்கும் ட்விட்டர் நிர்வாகத்திற்கு இடையே மோதல் வெடித்தது.
அது குறித்து அவரிடமிருந்து கடிதம் ஒன்றைப் பெற்றதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது. அந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டரின் பங்கு விலைகள் 12.7 வீதம் ஏற்றம் கண்டன.