வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கி 11 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் இன்று (12-10-2022) மாலை ஓமந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:
வவுனியா, ஓமந்தை, கிங்டம் பிரேக் பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது மாலையில் மழை பெய்தது.
இதனிடையே மாடுகள் நனைந்த பகுதியில் உள்ள மரத்தில் மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த 7ஆம் திகதி இடி மின்னலினால் மாமடு பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.