பாகிஸ்தானில் வெள்ளத்தால் தமது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் தமது வீடுகளை நோக்கிச் செல்லும் மக்களை ஏற்றிய பஸ் வண்டி ஒன்று தீப்பற்றியதில் 12 சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ள நீர் வற்றியதை அறிந்து தாம் அடைக்கலம் பெற்றிருந்த கராச்சி நகரில் இருந்து சில குடும்பத்தினர் தமது சொந்த ஊரான கைர்பூர் நதான் ஷாவை நோக்கி பயணித்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பஸ் வண்டியின் வளிச்சீராக்கியில் ஏற்பட்ட கோளாறை அடுத்தே தீ ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.