0
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.