நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம் என்று சொல்வதுண்டு இதை நீங்கள் வெந்நீராக்கி அவ்வபோது குடித்து வந்தால் எண்ணெய் உணவுகள், அதிக இனிப்பு வகைகள் செரிமானக்கோளாறு பாதிப்பு இருந்தால் இதை சரிசெய்ய வெந்நீர் உதவும்.
நமது முன்னோர்கள் விருந்துக்கு பிறகு வெந்நீர் குடிக்க காரணமும் இதுதான். இது கொழுப்பை கரைக்க செய்பவை. உடலில் கொழுப்பை சேரவிடாமல் செய்யும். தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நிச்சயம் உணர்வீர்கள்.
சோற்றுக்கற்றாழை மடல்களில் இருக்கும் நுங்கு போன்ற பகுதியை வெளியே எடுத்து அதை நன்றாக ஓடும் நீரில் கழுவி சுத்தம் செய்து மோருடன் சேர்த்து மசித்து குடித்து வரலாம். இதையும் வெறும் வயிற்றில் அல்லது காலை 11 மணிக்கு குடிக்கலாம். இது உடலை குளிர்ச்சியாக்கும் என்பதோடு தொப்பையையும் குறைக்கும்.
தொப்பைக்கு என்று தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. எளிமையான முறையில் அனைவருமே செய்யகூடிய தோப்புக்கரணம் மட்டுமே உங்கள் தொப்பையை நன்றாக குறைக்க செய்யும். தவிர்க்காமல் தினசரி செய்து வந்தால் பலன் நிச்சயம்.