போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசேட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதன் போது குறித்த பெண்ணிடம் இருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய குடும்ப தலைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.