t20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தை பின் தள்ளி முன்னேறிய இலங்கை நேற்றைய தினம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு நடைபெற்ற t20 போட்டியில் தக் லூயிஸ் முறையில் இங்கிலாந்து படு தோல்வி அடைந்தது.
நேற்று மழை காரணமாக தாமதித்து ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் அன்டி பெல்பிர்னி 47 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார்.
தொடர்ந்து பதிலெடுத்தாடி இங்கிலாந்து அணி ஆரம்பம் தொட்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 14.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.