கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை கொண்ட விமானங்கள் இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக, கூறியுள்ளது .
நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை இது நிவர்த்தி செய்யும் என சீனா குறிப்பிட்டுள்ளது இவ்வாறு வழங்க பட்ட மருந்துகளின் பெறுமதி ரூ. 1.8 பில்லியன் என தூதரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
இதை போலவே கடந்த ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ரூ. 1.2 பில்லியன்பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.