நமது வீடுகளில் பெரியவர்கள் “நாள் பார்த்து எதையும் செய்” என்று சொல்லும் போது இன்றைய நவீன வாழ்க்கைக்கு பழக்க பட்ட இளையவர்கள் கூறும் வார்த்தை மிகவும் ஏளனமாக இருக்கும் “தூக்கி கொண்டு போ உன்னுடைய பழைய பஞ்சாங்கத்தை” என்று இலகுவில் சொல்லி விடுவோம்
ஆனால் அது எவ்வளவு முக்கியமானது என்று தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன என்று பாப்போம் ஆனால் பஞ்சாங்கத்தை ஐந்திறம் என்பர் சைவர்களின் கால கணிப்பு முறைமையையே பஞ்சாங்கம் அல்லது ஐந்திறம் என்பர்பஞ்ச + ஐந்து என்றும் அங்கம் உறுப்புக்களை என்றும் சேர்த்து ஐந்து உறுப்புக்களை கொண்ட ஒரு கணிப்பு முறை ஆகும் இது பஞ்சாங்கம் என்று வட மொழிச் சொல்லே ஆகும்.
பஞ்சாங்கம் இன்று நிகழ்வுகளுக்கு சோதிடத்துக்கும் பார்க்கப்பட்டாலும் இதை நம் முன்னோர்கள் ஒரு வானிலை அறி நூலாகவே பயன்படுத்தி வந்தனர் இன்றய நவீன கருவிகள் பல விடயங்களை கணித்து கொடுக்கின்றது. ஆனால் இத்தகைய கருவி இல்லாத காலத்திலேயே நம் பெரியவர் பஞ்சாங்கத்தை கொண்டே வரும் ஆபத்துக்களை துல்லியமாக கணித்தார்கள் என்றால் எதிர்ப்பீர்களா