உலகங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களுக்கான தலைசிறந்த தலமாக விளங்கும் கேரளாவின் சபரிமலை அய்யப்பன் தலம் ஆதி தலமாக விளங்குகின்றது .இந்த ஆலயத்துக்கு தமிழகம் தொட்டு இந்தியாவின் அனைத்து மாநில பக்தர்களும் வருவதுண்டு அது மட்டும் இன்றி உலகளவில் அய்யப்பன் அடியவர்களும் வருவது வழக்கம்
இன்று கார்த்திகை மாதம் ஆரம்பநாள் அய்யப்பன் விரதம் இருக்கும் அடியவர்கள் சபரிமலை சென்று வழிபடுவது வழக்கம்
மண்டல பூஜை மகர விளக்கு தரிசனத்துடன் கார்த்திகை மாதம் 1ஆம் திகதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலையில் சுமந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம் . மண்டல பூஜை தரிசனம் காண்போர் 41 நாட்கள் விரதமும் மகர விளக்கு தரிசனம் காண்போர் 60 நாட்கள் விரதமும் இருப்பர்
இதற்காக துளசிமாலை, முத்து,மணிமாலைகளின் விற்பனையாவது வழக்கம்
ஐப்பசி மாத பூஜை 16 ஆம் திகதி புதன் மாலை நடை திறந்து பூஜை நடந்தது
.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடந்ததும் 18 ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டு பூஜைகள் ஆரம்பமானது.
17 ஆம் திகதி ஆகிய இன்று மேல் சாந்தி ஜெயராம் நம்பூதிரிகள் அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறந்துள்ளார் இனி 17 தொடக்கம் 2023 ஜனவரி 20 ஆம் திகதி வரை இது வழமையில் நடக்கும்.
மண்டல பூஜை மகர விளக்கு பூஜை எனவும் படி பூஜை கட்டணம் 75000 இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள இதற்கான முற்பதிவுகள் 2037 ஆம் ஆண்டு வரை பக்தர்களால் பதியப்பட்டு விட்டன அதை போல் உதயாஸ்தமன பூஜைக்கு 40000 இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முற்பதிவு 2024 ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டு விட்டது.
இந்த முறை பக்தர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை அத்துடன் பெண்கள் எந்த வயதினரும் செல்ல தடையில்லை என்று ஆலய நிருவாகம்( மார்க்சிஸ்ட்டு மூத்த நிர்வாகிகள்) கூறியுள்ளனர் .
முன்னர் இதற்கு தடை சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஜி. சுதாகரன் இந்த முறை இக்கருத்துக்களை ஆதரவளித்துள்ளார்.
மேலும் இங்கு பாதுகாப்புக்காக கமோண்டோக்களுடன் ட்ரான் கேமராக்களும் ஈடுபட்டுள்ளன சபரிமலை பண்டிகைக்காக இந்தியாவின் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவை தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேரூந்து சேவை மற்றும் கோவை வழியாக ரயில் சேவைகளும் விரைவு பஸ் சேவைகளும் அரசால் ஆரம்பிக்கபட்டுள்ளன.மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் செயல்பட உள்ளனர். என்பது சபரிமலை தரிசனம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.