“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படுமானால் மக்கள் புரட்சியின் இரண்டாவது அலை உருவாகும்” – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை. அதனை எவரும் தட்டிப் பறிக்க முடியாது. அவ்வாறு முற்பட்டால் மக்கள் நிச்சயம் வீதியில் இறங்குவார்கள். அது மக்கள் போராட்டத்தின் இரண்டாவது அலையாக அமையும்.
தேசிய மக்கள் சக்திக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி மாத்தறை மாநகர சபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், கம்பஹா மாநகர சபைக்கு மஹிந்த ஜயசிங்கவும், அநுராதபுரம் நகர சபைக்கு முன்னாள் எம்.பி. வசந்த சமரசிங்கவும் போட்டியிடுகின்றனர்” – என்றார்.