கொதித்த ரசத்தில் விழுந்த கல்லூரி மணவன் பாலியாகிய சம்பவம் இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரையில் நடை பெற்றுள்ளது சதீஷ் ( 20) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி செலவிற்காக பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணி செய்து வந்தார்.
மாணவர் சதீஷ் கடந்த 23 ஆம் தேதி மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் அதை பின்வாக்கில் தூக்கி சென்றார்.
பின்னோக்கி வேகமாக நடந்து சென்றதால் அவர் கவன குறைவாக அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவில் நிலை தடுமாறி உள்ளே விழுந்து உள்ளார்.