வீடுகளில் முன்னைய காலங்களில் யாருக்கும் நோய் நிலை ஏற்பட்டால் முதலில் பாட்டியிடம் தான் மருந்து கேட்பது உண்டு இப்போது எல்லாம் அப்படி இல்லை எடுத்த எடுப்பில் வைத்தியசாலை செல்கின்றோம். அவ்வாறு நாம் புறக்கணித்த சில நல்ல பாட்டி வைத்தியம் இதோ
கொய்யா இலையை வெயிலில் காயவைத்து அல்லது பச்சையாகவோ தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து பன்னிரண்டு வாரம் தொடர்ச்சியாக குடித்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கும்.
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்
வாழைப்பூவுடன் முருங்கை கீரை சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட குடற்புண் ஆறும்
வெந்தயத்தை வறுத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் பித்த கோளாறு இல்லாமல் போகும்.
மாதுளைப்பழச்சாறு தேங்காய் பால் சேர்த்து சாப்பாட்டு வந்தால் நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கும்.
கொப்பரை தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும் .