தற்போதுள்ள நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மீண்டும் இந்நாட்டில் நடத்தப்படும் அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறும், தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) செயற்பாட்டின் மூலம் செல்லாது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐக்கிய இராச்சியத்தால் (UK) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக கொள்வனவு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எந்த தடையையும் வெற்றிகொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) சட்டத்துக்கான திருத்தங்களை முன்மொழியுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.