செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குழந்தை பற்றி 40 குறிப்பு

குழந்தை பற்றி 40 குறிப்பு

3 minutes read

பெற்றோர்களுக்கான பதிவு இது.

குழந்தை தானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் தவறுகள். குழந்தையின் தவறுகளுக்கும் ஆளுமை குறைபாடுகளுக்கும் அழிவுக்குமான ஆரம்பமாக அமையலாம்.

ஆதலால் குழந்தை முன்னிலையில் பெற்றோர்களாகிய நீங்கள் தவிர்க்க வேண்டிய அல்லது சரி செய்ய வேண்டிய 40 விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1.முதலில் குழந்தையை எப்போதும் தனிமையில் விடாதீர்கள். பெரியவர்களின் முன்னிலையிலே குழந்தைகள் இருக்கும் படி சூழலை அமைத்துக் கொடுங்கள்.

2.தந்தையை, தாயை அல்லது பெரியவர்களைக் குழந்தை அடிக்கும் போது பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள்.

3.’தண்டனைத் தருகிறேன்’ எனும் பெயரில் குழந்தையிடம் அன்பாக இல்லாமல் இருக்காதீர்கள். அதேவேளை அன்பாக இருக்கின்றோம் எனும் பேரில் செல்லம் கொடுக்காதீர்கள்.

4.குழந்தைகள் முன்னிலையில் மற்றொரரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு உங்கள் குழந்தையை தாழ்த்தி மற்றவர்களிடம் பேசாதீர்கள்.

5.உங்கள் குழந்தையைப் பற்றி நீங்களே அதிகமாக பெருமையாக பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

6.உன்னை ஹொஸ்டலில் விட்டுவிடுவேன். உன்னை வேறு யாருக்காவது கொடுத்து விடுவேன் என பயமுறுத்தி வைக்காதீர்கள்.

7.’தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை’ என்ற நிலையை குழந்தை உணரச் செய்துவிடாதீர்கள். குழந்தை சொல்வதை தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள்.

8.ஆண், பெண் குழந்தைகள் எனப் பாலினம் பார்த்து, சிறப்பு சலுகைகளைக் கொடுக்காதீர்கள்.

9.ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ தெரிந்த நபரிடமோ அதிகம் பழக்கமில்லாத நபரிடமோ போக மறுத்தால் வலுகட்டாயமாகக் குழந்தையை அவர்களிடம் விடாதீர்கள்.

10.குழந்தைகள் தவறு செய்யும்போது தடுக்க வேண்டாம். தவறு செய்யும் போதுதான் அவர்கள் கற்று கொள்வார்கள். தவறு செய்கையில் குழந்தையின் உடலுக்கு ஆபத்து என்றால் மட்டும் தடுத்துவிடுங்கள்.

11.குழந்தை கவலையிலே இருந்தால், அதைப் பார்த்தும் நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் சாக்லேட்டோ பிஸ்கெட்டோ வாங்கித் தந்து சமாளிக்க கூடாது. என்ன பிரச்னை எனக் கேட்டு தீர்த்து வையுங்கள்.

13.குழந்தை தோல்வி அடைந்தால் அவர்களைத் திட்டுவது, அடிப்பது போன்றவற்றை செய்யாது தோல்வியிலிருந்து குழந்தையை மீட்க அனைத்து முயற்சிகளையும் நீங்களே செய்யுங்கள்.

14.குழந்தைக்கு விருப்பம் இல்லாத வகுப்பில் சேர்த்து விடாதீர்கள். கட்டாயப்படுத்தி பாடல் கற்கும் வகுப்பு, நடனம், நீச்சல் என எதையும் வலுகட்டாயமாக சேர்க்க வேண்டாம்.
தேவையேற்படின் அவர்களுக்கு துறைசார் விருப்பத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.

15.குழந்தையின் கேள்விகளுக்கு பொறுமையாகவும் விளக்கமாகவும் பதில் அளியுங்கள்.

16.குழந்தையின் பொருட்களை வைத்துக்கொள்ள ஒரு இடமோ ஒரு அலுமாரியோ ஒரு அறையோ கொடுக்கலாம். குழந்தைகெல்லாம் எதற்கு தனி இடம் என அலட்சியப் படுத்தாதீர்கள்.

17.உடன் பிறந்த குழந்தைகளிடமே பாசம், வெறுப்பு, கோபம் என வித்தியாசம் காண்பிக்க கூடாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் அனைத்தும் சரி சமம் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

18.குழந்தை வெளியே போக வேண்டும் எனக் கேட்டால், அவர்களைத் திட்ட கூடாது. வசதி இல்லாவிட்டாலும் பீச், பார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

19.வெவ்வேறு குடும்ப முறையில் வரும் குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். யாருடனும் சேராதே வீட்டிலே இரு எனக் குழந்தையை அடைத்து வைப்பதைத் தவிருங்கள்.

20.குழந்தையின் பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள பென்சில், பெயின்ட் பாக்ஸ், பொம்மைகள் போன்றவற்றை வாங்கித் தரலாம். டிவி பார் என டிவியைப் பார்க்கக் குழந்தைகளை விடாதீர்கள்.

21.எல்லாக் குழந்தையும் வளர்ச்சியிலும் படிப்பிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அவர்களை ஒப்பிட்டு திட்ட வேண்டாம். கேலி செய்ய வேண்டாம்.

22.குண்டு, ஒல்லி, கருப்பு, வெள்ளை, மூக்கு சப்பை, வாய் கோணல் எனக் குழந்தையின் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்ய கூடாது.

23.குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, குழந்தை முன்னிலையில் கெட்ட வார்த்தைகளை பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

24.குழந்தையிடம் மற்றவர்களைப் பற்றி தவறாகச் சொல்லி, சிறு வயதிலே தவறான கண்ணோட்டத்தை வளர்க்க கூடாது.

25.பெண் குழந்தைகள் விளையாட கூடாது, வீட்டிலே இரு எனச் சொல்லி வளர்க்கக் கூடாது.

26.ஆண் குழந்தைகள் விளையாடலாம். ஆண் குழந்தைகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மமதையை குழந்தையின் மனதில் தோன்ற செய்யாதீர்கள்.

27.குழந்தையை பொத்தி பொத்திப் பாதுகாக்காதீர்கள். மற்ற குழந்தைகளைப் போல அவர்களும் சுதந்திரமாக செயல்பட உதவி செய்யுங்கள்.

28.குழந்தை ஏதாவது ஒரு போட்டியில் தோற்றுவிட்டால், நீங்களும் சேர்ந்து அழுது குழந்தையை பலவீனமாக மாற்றாதீர்கள்.

29.குழந்தையின் முடிவுகளை தாங்களே எப்போதும் எடுக்காதீர்கள். குழந்தைகளையும் அவ்வப்போது சிந்திக்க விடுங்கள்.

30.எப்போதும் படிப்பு, படிப்பு எனக் குழந்தைக்கு நெருக்கடியை கொடுக்க கூடாது. குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்று நடக்க அனுமதியுங்கள்.

31.ஐந்து வயதுக்குள் குழந்தைக்கு சொல்லித் தர வேண்டிய நற்பண்புகளை சொல்லிக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். தாயும் தந்தையும் வீட்டு நபர்கள் யாரேனும் நற்பண்புகளைச் சொல்லி தருவது அவசியம்.

32.குழந்தை அடம் பிடிக்கிறது எனக் கேட்டது எல்லாம் வாங்கி தர கூடாது. அடத்தை சமாளித்து, குழந்தைக்கு அறிவுரை சொல்லுங்கள்.

33.குழந்தை முன்னிலையில் தாய் தந்தை பாலியல் தொடர்பான சீண்டல்களை செய்ய கூடாது.

34.குழந்தை முன்னிலையில் பாலியல் தொடர்பான காட்சிகளை பார்க்க வேண்டாம்.

35.வெளி இடங்களிலோ வீட்டின் வரவேற்பறை அனைவரின் முன்னிலையிலோ குழந்தையின் ஆடையைக் கழட்டி, வேறு ஆடையை மாட்ட வேண்டாம். குழந்தையை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடை மாற்றுங்கள்.

36.குழந்தை முன் தாயோ தந்தையோ ஆடைகளை மாற்ற கூடாது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தனது தாய், தந்தையின் மறைக்கப்பட்ட உறுப்புகளைப் பார்த்து குழம்பிப் போகலாம்.

37. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெரியவர்கள் குளிக்க வைப்பதைத் தவிர்க்கலாம். அவர்களுக்கு குளிக்க சொல்லிக் கொடுத்துவிடுங்கள்.

38. இந்த மதம், இந்தக் கடவுள் எனக் குழந்தைகள் மனதில் எதையும் திணிக்காதீர்கள்.

39. தங்களுடைய கனவுகளைக் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள்.

40. பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடாதீர்கள். அதுமட்டுமன்றி அடிப்பது, திட்டுவது, பிறரைத் தவறாக பேசுவதும் கூடாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More