நெல்லிக்காய் சாற்றின் நன்மைகள் 3 நெல்லிக்காய்களை இடித்து ஒரு டம்ளர் நீர் வீட்டுக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் ஐந்து மிளகு ,இரண்டு கிராம்பு இரண்டு ஏலக்காய் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டவும். அதனுடன் சிறிது தண்ணீர்.இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதை வாரம் ஒரு நாள் அருந்தினால் போதும்.
முடி உதிர்தலைத் தடுகிறது கூந்தலின் கருமைக்கு உதவுகிறது
என்றும் இளமைத் தோற்றத்துக்கு உத்தரவாதம் தரும்
சிறுநீர் பிரித்தலைத் தூண்டும் நச்சுக்களை வெளியேற்றும்
நெல்லிக்கனியின் நற்பண்புகள்
நெல்லிக்காயின் சாற்றை தினமும் குடித்து வந்தால் குடலியக்கத்தை சீராக வைக்கும்
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபட தினமும் 2 முறை நெல்லிச்சாறு குடிக்க வேண்டும்.
நெல்லியை சாற்றுடன் பாகற்காய் சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கணையத்தை தூண்டி இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை நோயை குணமாக்கும்.