பழங்கள் என்பது மனிதனுக்கு கிடைத்த அரிய மருந்துகளில் ஒன்று எனலாம் அத்தகைய பழங்களை பற்றிய சில நன்மைகளை பார்ப்போம்.
நாவல் பழத்தில் கல்சியம் அதிகம் இருப்பதால் அதை சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும் .
விற்றமின் பி-1 ,பி -2 , பி-5 , ஆகிய சத்துக்கள் நாவல் பழத்தில் நிறைந்துள்ளது . சக்கரையை தடுக்கும் அரு மருந்து .
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.பல்வலி பல் அசைவு போன்ற உபாதைகளையும் செவ்வாழைப் பழம். விரைவில் குணப்படுத்தும் .புற்று நோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.
நீங்கள் பல்லை பிரஷ்ஷில் தேய்ப்பத்தற்கு பதிலாக மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி , பல்லும் பளிச் சென்று இருக்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும் . அத்திப்பழத்தை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முலாம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் விரைவில் குணமாகும்.
சப்போட்டா பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளது மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கி , கொழுப்பை நீக்குகிறது.
குழந்தைகளுக்கு பப்பாசி பழத்தை கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும் எலும்பு வளர்ச்சி பல உறுதி ஏற்படும் . கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.