காஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று வலியுறுத்தும் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபை நிறைவேற்றியிருக்கிறது.
153 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. 10 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
கொள்கை அளவிலான அந்தத் தீர்மானத்துக்குப் பெருமளவு ஆதரவு கிடைத்திருப்பது போர் குறித்த உலகளாவிய கண்ணோட்டதைப் பிரதிபலிக்கிறது.
இங்கிலாந்து வாக்களிக்கவில்லை
அமெரிக்கா, இஸ்ரேல், பராகுவே மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் உக்ரேன் உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
காஸாவில் போர் நிறுத்தம் தேவை என்று இரண்டாவது முறையாக ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஒக்டோபரிலும் அதற்கான ஒரு தீர்மானத்தைப் பொதுச் சபை முன்வைத்தது. அப்போது 121 நாடுகள் ஆதரவளித்தன. 14 நாடுகள் எதிர்த்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.