செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ரசிகர்களின் ‘கெப்டன்’ ; தொண்டர்களின் ‘சொக்கத்தங்கம்’!

ரசிகர்களின் ‘கெப்டன்’ ; தொண்டர்களின் ‘சொக்கத்தங்கம்’!

4 minutes read

நிஜப்பெயர் : நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி

சினிமா பெயர் : விஜயகாந்த்

செல்லப் பெயர் : விஜி

கெளரவப் பெயர் : கெப்டன், புரட்சி கலைஞர், கறுப்பு எம்.ஜி.ஆர், சொக்கத்தங்கம்

அடையாளம் : ஏறிய புருவங்கள், கோபத்தில் மடிக்கும் நாக்கு

பிறப்பு : 25 ஆகஸ்ட் 1952

பிறந்த இடம் : திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு, இந்தியா.

பெற்றோர் : அழகர்சாமி – நாயுடு ஆண்டாள்

படிப்பு : 10ஆம் வகுப்பு வரை

ஆரம்ப கால வேலை : தந்தையின் அரிசி ஆலையை கவனித்துக்கொண்டார்!

மனைவி : பிரேமலதா

பிள்ளைகள் : விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன்

தமிழ் சினிமாவில் அறிமுகம் :  1978இல் காஜாவின் இயக்கத்தில் உருவான ‘இனிக்கும் இளமை’ திரைப்படம்

திருப்புமுனை திரைப்படங்கள் : ‘தூரத்து இடி முழக்கம்’ (1980), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981)

குணச்சித்திர நடிகராக பேசப்பட்ட திரைப்படம் : ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984)

விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி : 1981இல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த ‘சாதிக்கொரு நீதி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘நீதி பிழைத்தது’ என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. ரஜினிகாந்துக்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்றால், விஜயகாந்துக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லுமளவு பலம் வாய்ந்த கூட்டணியானது. இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

நம்பிக்கை நாயகனாக ஜொலித்த திரைப்படம் : ‘ஊமை விழிகள்’ திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆபாவாணன் தயாரித்த இந்த படத்தில் டி.எஸ்.பி. தீனதயாளனாக விஜயகாந்த் வரும் காட்சிகள் கதைக்கே நம்பிக்கையூட்டியது. ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், வானை சந்திரசேகர், விசு, அருண் பாண்டியன், கார்த்திக், சரிதா, ஸ்ரீவித்யா, செந்தில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் இவர் தோன்றும் காட்சிகள் தனித்து பரபரப்பூட்டின.

‘கெப்டன்’ ஆனது எப்படி? : 1991இல் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ விஜயகாந்தின் 100வது திரைப்படமாகும். அந்த படம் வெளியானதிலிருந்து இன்று வரை ரசிகர்களாலும் நண்பர்களாலும் கட்சி தொண்டர்களாலும் அன்போடும் மரியாதையோடும் ‘கெப்டன்’ என்று அழைக்கப்படுகிறார்.

மதுரை‍யில் பிரபலம் : ‘கள்ளழகர்’ திரைப்படத்துக்காக விஜயகாந்த் போட்ட கள்ளழகர் வேடம்.

பேசி நடித்த பிரபல வசனம் : “தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு”

மகுட வாசகம் : “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

பொருத்தமான வேடங்கள் : காவல் துறை அதிகாரி, பஞ்சாயத்து தலைவர், ஏனைய கிராமிய கதாபாத்திரங்கள்

சிறப்புத் திறமை : புள்ளிவிபரத்தோடு தகவல்களை புட்டு புட்டு வைப்பது

அரசியல் பிரவேசம் : 2005 செப்டெம்பர் 14 அன்று மதுரையில் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற கட்சியை உருவாக்கினார்.

எதிர்க்கட்சித் தலைவர் : 2011இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.கவை பின்தள்ளி எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை தே.மு.தி.க பெற்று, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

பெருந்தன்மை : விஜயகாந்தின் அலுவலகத்துக்கு யார் சென்றாலும், தான் சாப்பிடும் அதே சாப்பாட்டை வருபவர்களுக்கும் கொடுத்து, பசி தீர்த்து அனுப்புவதே. காமராஜர், எம்.ஜி.ஆர். வழியில் ஏழைகளுக்கு உணவளிக்கும் பண்பு இவருக்கும் உண்டு. படப்பிடிப்புத் தளத்திலும் தனக்கு மட்டுமன்றி, சக நடிகர்கள், பணியாளர்களுக்கும் சேர்த்தே உணவு கொண்டுவரச் சொல்லி எல்லோருடனும் பகிர்ந்து சாப்பிடுவார்.

பொக்கிஷம் : எம்.ஜி.ஆரின் பிரச்சார வாகனம், தங்க மோதிரம், கோர்ட் பேன்ட் (எம்.ஜி.ஆர் பயன்படுத்திய இந்த இந்த பொருட்களை விஜயகாந்த் தனது பூஜையறையில் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார்.)

மறைவு : விஜயகாந்த் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28ஆம் திகதி வியாழக்கிழமை தனது 71ஆவது காலமானார். அவரது இறப்புக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், டிசம்பர் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள்

1979 – அகல் விளக்கு

1979 – இனிக்கும் இளமை

1980 – நீரோட்டம்

1980 – சாமந்திப்பூ

1980 – தூரத்து இடி முழக்கம்

1981 – சட்டம் ஒரு இருட்டறை

1981 – சிவப்பு மல்லி

1981 – நெஞ்சில் துணிவிருந்தால்

1981 – சாதிக்கொரு நீதி

1981 – நீதி பிழைத்தது

1982 – பார்வையின் மறுப்பக்கம்

1982 – சிவந்த கண்கள்

1982 – சட்டம் சிரிக்கிறது

1982 – பட்டணத்து ராஜாக்கள்

1982 – ஓம் சக்தி

1982 – ஆட்டோ ராஜா

1983 – சாட்சி

1983 – டௌரி கல்யாணம்

1983 – நான் சூட்டிய மலர்

1984 – மதுரை சூரன்

1984 – மெட்ராஸ் வாத்தியார்

1984 – வெற்றி

1984 – வேங்கையின் மைந்தன்

1984 – நாளை உனது நாள்

1984 – நூறாவது நாள்

1984 – குடும்பம்

1984 – மாமன் மச்சான்

1984 – குழந்தை ஏசு

1984 – சத்தியம் நீயே

1984 – தீர்ப்பு என் கையில்

1984 – இது எங்க பூமி

1984 – வெள்ளை புறா ஒன்று

1984 – வைதேகி காத்திருந்தாள்

1984 – நல்ல நாள்

1984 – ஜனவரி

1984 – சபாஷ்

1984 – வீட்டுக்கு ஒரு கண்ணகி

1985 – அமுதகானம்

1985 – அலையோசை

1985 – சந்தோச கனவுகள்

1985 – புதுயுகம்

1985 – நவகிரக நாயகி

1985 – புதிய சகாப்தம்

1985 – புதிய தீர்ப்பு

1985 – எங்கள் குரல்

1985 – ஈட்டி

1985 – நீதியின் மறுபக்கம்

1985 – அன்னை பூமி

1985 – ஏமாற்றாதே ஏமாறாதே

1985 – சந்தோச கனவு

1985 – தண்டனை

1985 – நானே ராஜா நானே மந்திரி

1985 – ராமன் ஸ்ரீராமன்

1986 – அம்மன் கோயில் கிழக்காலே

1986 – அன்னை என் தெய்வம்

1986 – ஊமை விழிகள்

1986 – எனக்கு நானே நீதிபதி

1986 – ஒரு இனிய உதயம்

1986 – சிகப்பு மலர்கள்

1986 – கரிமேடு கரிவாயன்

1986 – நம்பினார் கெடுவதில்லை

1986 – தர்ம தேவதை

1986 – மனக்கணக்கு

1986 – தழுவாத கைகள்

1986 – வசந்த ராகம்

1987 – வீரபாண்டியன்

1987 – கூலிக்காரன்

1987 – சட்டம் ஒரு விளையாட்டு

1987 – சிறை பறவை

1987 – சொல்வதெல்லாம் உண்மை

1987 – நினைவே ஒரு சங்கீதம்

1987 – பூ மழை பொழியுது

1987 – ஊழவன் மகன்

1987 – ரத்தினங்கள்

1987 – வீரன் வேலுத்தம்பி

1987 – வேலுண்டு வினையில்லை

1988 – உழைத்து வாழ வேண்டும்

1988 – உள்ளத்தில் நல்ல உள்ளம்

1988 – காலையும் நீயே மாலையும் நீயே

1988 – செந்தூரப்பூவே

1988 – தம்பி தங்கக் கம்பி

1988 – தெற்கத்திக்கள்ளன்

1988 – தென்பாண்டிச்சீமையிலே

1988 – நல்லவன்

1988 – பூந்தோட்ட காவல்காரன்

1988 – மக்கள் ஆணையிட்டால்

1989 – என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்

1989 – தர்மம் வெல்லும்

1989 – பொறுத்தது போதும்

1989 – பொன்மன செல்வன்

1989 – மீனாட்சி திருவிளையாடல்

1989 – ராஜநடை

1990 – எங்கிட்ட மோதாதே

1990 – சத்ரியன்

1990 – சந்தனக் காற்று

1990 – சிறையில் பூத்த சின்ன மலர்

1990 – பாட்டுக்கு ஒரு தலைவன்

1990 – புதுப்பாடகன்

1990 – புலன் விசாரணை

1991 – கேப்டன் பிரபாகரன்

1991 – மாநகர காவல்

1991 – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

1992 – காவியத் தலைவன்

1992 – சின்ன கவுண்டர்

1992 – தாய்மொழி

1992 – பரதன்

1993 – எங்க முதலாளி

1993 – ஏழை ஜாதி

1993 – கோயில் காளை

1993 – செந்தூரப் பாண்டி

1993 – ராஜதுரை

1993 – சக்கரைத் தேவன்

1994 – ஆனஸ்ட் ராஜ்

1994 – என் ஆசை மச்சான்

1994 – சேதுபதி ஐ.பி.எஸ்

1994 – பதவிப் பிரமாணம்

1994 – பெரிய மருது

1995 – கருப்பு நிலா

1995 – காந்தி பிறந்த மண்

1995 – திருமூர்த்தி

1996 – அலெக்சாண்டர்

1996 – தமிழ்ச் செல்வன்

1996 – தாயகம்

1997 – தர்மச்சக்கரம்

1998 – உளவுத்துறை

1998 – வீரம் விளைஞ்ச மண்ணு

1998 – தர்மா

1999 – பெரியண்ணா

1999 – கள்ளழகர்

1999 – கண்ணுபடப் போகுதையா

2000 – வானத்தைப் போல

2000 – சிம்மாசனம்

2000 – வல்லரசு

2001 – வாஞ்சிநாதன்

2001 – நரசிம்மா

2001 – தவசி

2002 – ராஜ்ஜியம்

2002 – தேவன்

2002 – ரமணா

2003 – சொக்கத்தங்கம்

2003 – தென்னவன்

2004 – கஜேந்திரா

2004 – நிறைஞ்ச மனசு

2004 – எங்கள் அண்ணா

2006 – சுதேசி

2006 – பேரரசு

2006 – தர்மபுரி

2007 – சபரி

2008 – அரசாங்கம்

2009 – மரியாதை

2009 – எங்கள் ஆசான்

2010 – விருதகிரி

2016 – சகாப்தம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More