மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 1000cc குறைவான திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில், இறக்குமதிக்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த மாதத்துக்குள் செய்யப்படும் என தொழிற்சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் குறைந்த எஞ்சின் திறன் கொண்ட கார்கள், வெளிநாட்டு கையிருப்பை நிலையாக வைத்திருப்பதற்கான திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.
அந்நிய செலாவணி மாற்று விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் வாகனங்களை இறக்குமதி செய்ய தற்காலிகமாக விதித்த தடையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நீட்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.