வட கொரியா அதன் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள கடல் பகுதியில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியாங் ஆகிய இடங்களில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டறிந்ததாக கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் தென் கொரிய இராணுவத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தென் கொரிய ராணுவம் பதில் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்.
இதனால் தென்கொரியா கடல் எல்லைக்கு அருகே பதற்றம் அதிகரித்துள்ளது.