இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில், 3ல் ஒரு பங்கு குழந்தைகள் ஆவர். பாலஸ்தீன பகுதியை விட்டு செல்ல முடியாமல், முகாம்களிலும், ஐ.நா. நடத்த கூடிய காப்பகங்களிலும் அவர்கள் தங்கி உள்ளனர்.
போரால் பாலஸ்தீனர்கள் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.