45
பரந்தன் குமரபுரத்தில் இன்று அமரர் சுப்பையா பரமநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 280 பயனாளிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு 220 தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. தொழிலதிபர் சுப்பையா பாக்கியநாதன் (சாவகச்சேரி லட்சுமி ரேடர்ஸ்) அவர்கள் அவரது சகோதரன் அமரர் சுப்பையா பரமநாதன் ஞாபகார்த்தமாக இந்த மூக்குக் கண்ணாடிகளை வழங்குவதற்கு அனுசரணையை வழங்கியிருந்தார்.
கிளிநொச்சி நகர றொட்டரிக் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வானது அதன் தலைவர் றோட்டேரியன் வனிதா சிவனேசன் அவர்களுடன் இணைந்து கிளிநொச்சி ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளரான றோட்டேரியன் மகாலிங்கம் பத்மநாதன் அவர்களது ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த கண் பரிசோதனை நிபுணர் ஆர் எல் எஸ் ஒப்டிக்கல்ஸ் லியோன் ரகு அவர்கள் பயனாளிகளை பரிசோதித்து மூக்குக் கண்ணாடிகளை பரிந்துரைக்க அமரர் சுப்பையா பரமநாதன் அவர்களின் துணைவியார் விமலாதேவி பராமநாதன் முதலாவது மூக்குக் கண்ணாடியினை வழங்கி வைத்தார்.
சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் கிளி மக்கள் அமைப்பு மற்றும் பரந்தன் இந்து பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் ஆதரவுடன் மேற்படி நிகழ்வானது இன்று நடைபெற்றது.