ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக, இராணுவ வீரர்களின் எண்ணிக்கை, நாட்டின் தேவைக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே உள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவித்தது.
இந்நிலையில், இராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி இராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன் புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து கொள்ளலாம்.
பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் ஜப்பான் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.