Colne, Lancashire பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.26 மணியளவில் நியூ மார்க்கெட் தெருவில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அங்கு ரிச்சர்ட் சேம்பர்லைனை, 34, கண்டுபிடித்ததாக லங்காஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
பல கடுமையான காயங்களுக்கு ஆளான திசேம்பர்லைன், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தபோது, துணை மருத்துவர்களால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.
எனினும், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.
இதனையடுத்து, Colne பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.