இங்கிலாந்தில் இந்த ஆண்டின் வெப்பமான (20.9C) நாளாக சனிக்கிழமை மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் கேத்லீன் புயலால் பயணக் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், 70 மைல் வேகத்தில் காற்று வீசியதால் சுமார் 140 விமானங்கள் இரத்து செய்யப்பட ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் Santon Downham, Suffolk பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. முன்னதாக அதிகபட்சமாக 19.9C வெப்பனிலை கடந்த ஜனவரி 28 ஆம் திகதி பதிவாகி இருந்தது.
எவ்வாறாயினும், தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 19.5Cஆக பதிவாகும் என்று வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.