பாதை எனும் ஈழத்து குறும்திரைப்படம் சுதாகரன் கோகுலனின் படைப்பு ஆக்கத்தில் கெளதம் அவர்களின் ஒளிப்பதிவு, ஒப்பனையிலும் வெளிவந்துள்ளது.
நடிகர்களாக டிலுக்சன், சசிதரன், மிதுசன், மாதங்கி, கெளதம், கோகுலன் என்பவர்களின் நடிப்பில் இத்திரைப்படம் utv யினால் நடத்தப்பட்ட போதைபொருள் விழிப்புணர்வுக்காக இக் குறும்படம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படம் சமூகத்தில் எவ்வாறு போதைபொருள் ஊடுறுவி ஏற்படும் பாதக தன்மையை தத்ரூபமாக பார்வையாளரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் சமூக அக்கறையிலும் தங்களுடைய வலைத்தளத்திலும் ஆதரவு தருமாறு படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.