சீனாவின் சொக்குயிங் விளையாட்டரங்கில் இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்; அருண தர்ஷன முதலாம் இடத்தைப் பெற்றார்.
பெல்ட் அண்ட் ரோட் உலக மெய்வல்லுநர் வெண்கல முத்திரை கண்டங்கள் சுற்றுப்பயண க்ராண்ட் ப்றீ போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 45.48 செக்கன்களில் ஓடி முடித்து அவர் முதலாம் இடத்தைப் பெற்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கான தரவரிசைப் புள்ளிகளை அருண தர்ஷன சற்று அதிகரித்துக்கொண்டுள்ளார்.
இந்த போட்டி சி பிரிவு உலக மெய்வல்லுநர் போட்டி என்பதால் மிகக் குறைந்த புள்ளிகளே அருண தர்ஷனவுக்கு கிடைத்துள்ளது.
சைனீஸ் தாய்ப்பேயில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டியிலும் அதன் பின்னர் தென் கொரியாவில் நடைபெறவுள்ள போட்டியிலும் பங்குபற்றும் அருண தர்ஷன, திகமவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுநர் போட்டியிலும் பங்குபற்றுவார்.
தேசிய மெய்வல்லுநர் போட்டிடயை 45.00 செக்கன்களுக்குள் நிறைசெய்தால் ஒலிம்பிக் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மெய்வல்லுநர் போட்டி முதல் தரப் போட்டி என்பதால் அதில் வெற்றிபெறுபவருக்கு 100 தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும்.