இலங்கை தேசிய கராத்தே அணியை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ தெரிவுக்குழுவின் தலைவராக அன்ரோ டினேஸ் தேவசகாயம் மற்றும் உறுப்பினர்களாக W.M.M.மனோஞ் உனந்தென்ன, W.M.D.C.B.விஜிகோன், C.J.சமரசேகர, B.அனுர ரத்னதேவ ஆகியோர் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்ரோ டினேஸ் முதுகலை வணிக நிர்வாக (MBA) பட்டதாரியும், அமேசன் கல்லூரியின் வருகைதரும் விரிவுரையாளரும், ஜப்பான், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் கராத்தே கலையின் உயர்நுட்பங்களை கற்று உயர்தர டான் டிப்ளோமா தரத்தினையும், தேசிய A தர கராத்தே நடுவர் தரத்தினையும் பெற்றவரும் ஆவார்.
தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்ரோ டினேஸ், ஜப்பான் கராத்தே தோ சம்மேளனம் மற்றும் AJKS அகில ஜப்பான் கராத்தே தோ சோட்டோகான் அமைப்பின் உறுப்புரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.