(சுதந்திர ரஷ்ய ஊடகவியலாளர்கள் மத்தியில் மதிப்பிற்குரிய நபரான கெர்ஷ்கோவிச் கைது செய்யப்பட்டமை ரஷ்ய ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பியது. ரஷ்யாவின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளர்கள் அவரை விடுவிக்கக் கோரியுள்ளனர்)
ரஷ்யாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் அமெரிக்க தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (Wall Street Journal) ரஷ்யாவில் பணியாற்றிய நிருபர் ஆவார்.
அவர் மார்ச் 2023 இல் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு அமைப்பால் (பெடரல் செக்யூரிட்டி சர்வீஸால்) முதலில் தடுத்து வைக்கப்பட்டார்.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பின்னரான
பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும். இந்த கைதுக்கு வெள்ளை மாளிகை பலத்த கண்டனம் தெரிவித்தது.
உக்ரைன் போரால் மீள பனிப்போர்:
உக்ரைன் போரால் ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போர் மீள நிலவும் சூழலில், ஊடகவியலாளரின் கைது இரு நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இவான் கெர்ஷ்கோவிச் மீது, ரஷ்யா குறித்து ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக ரஷ்ய புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆயினும் கெர்ஷ்கோவிச் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
31 வயதான அமெரிக்கச் செய்தியாளர் இவான் கெர்ஷ்கோவிச் (Evan Gershkovich) மீது ரஷ்ய ஆயுத உற்பத்திக் கூடத்தில் உளவு பார்த்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால், அமெரிக்காவின் நிருபரான இவான் கெர்ஷ்கோவிச் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பனிப்போருக்குப் பிறகு உளவு பார்த்த குற்றம்:
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பற்றிய தூதரக அணுகல் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால்
இவான் கெர்ஸ்கோவிச் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கெர்ஷ்கோவிச் ரஷ்யாவில் தவறாகக் காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தயாராகி வருகிறது.
சோவியத் பனிப்போருக்குப் பிறகு உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்கப் பத்திரிகையாளரின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவான் கெர்ஸ்கோவிச் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.
20 ஆண்டு சிறைத் தண்டனை:
இவான் கெர்ஷ்கோவிச் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை
மேல்முறையீட்டு வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவாவன் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவின் ஆயுத உற்பத்திக் கூடத்திலிருந்து ரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றதாகச் ரஷ்யா அவரைக் கைது செய்தது.
தம்முடைய ஊழியர் உளவு பார்த்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள Wall Street Journal பத்திரிக்கையும், வெள்ளை மாளிகையும் அவரை உடனே விடுதலை செய்யும்படி வலியுறுத்தின.
கெர்ஷ்கோவிச் 2016 முதல் 2017 வரை தி நியூயார்க் டைம்ஸ், 2017 முதல் 2020 வரை தி மாஸ்கோ டைம்ஸ் மற்றும் ஜனவரி 2022 இல் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்குச் செல்வதற்கு முன்பு 2020 முதல் 2022 வரை ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்ஸில் பணியாற்றினார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன் ஆறு ஆண்டுகள் ரஷ்யாவில் வசித்து வந்தார், அப்போது அவர் மாஸ்கோவில் இருந்து உக்ரைனில் நடந்த போரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டார். அவர் யெகாடெரின்பர்க்கில் பணிபுரிந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் சுதந்திர ஊடகம் :
சுதந்திர ரஷ்ய ஊடகவியலாளர்கள் மத்தியில் மதிப்பிற்குரிய நபரான கெர்ஷ்கோவிச் கைது செய்யப்பட்டமை ரஷ்ய ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பியது. ரஷ்யாவின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளர்கள் அவரை விடுவிக்கக் கோரி ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்டனர்.
கெர்ஷ்கோவிச்சை விடுவிப்பது ஜோ பிடனுக்கு முன்னுரிமை:
கெர்ஷ்கோவிச்சின் கைதுக்கான உத்தரவின் பின்னணியில் அமெரிக்க சிறையில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்மட்ட ரஷ்யர்களுக்கு கைதிகள் பரிமாற்றம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசியல் நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.
உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் தங்கியிருந்த கெர்ஷ்கோவிச், 2023 இல் கைது செய்யப்பட்ட பின்னர் டைம் இதழால் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக கெர்ஷ்கோவிச்சை தவறாக காவலில் வைத்துள்ளனர் என்று அறிவித்தது. அத்துடன் அவரது வழக்கு பணயக்கைதிகள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரின் அலுவலகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தது.
கெர்ஷ்கோவிச்சின் கைது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. திரு. கெர்ஷ்கோவிச்சைக் காவலில் வைத்திருப்பதை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது என்றும்
கெர்ஷ்கோவிச்சை விடுவிப்பது ஜோ பிடனுக்கு முன்னுரிமை என்றும் அமெரிக்கா கடுந்தொனியில் கூறியுள்ளது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா