தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தேசிங்கு ராஜா 2’ எனும் திரைப்படத்தில் விமல், பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, சினேகா குப்தா, ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், மதுமிதா, ஜனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே இயக்குநர் எழில் – நடிகர்கள் விமல்- சூரி கூட்டணியில் 2013ஆம் ஆண்டில் வெளியான ‘தேசிங்கு ராஜா’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்பதும், இந்தத் திரைப்படத்தின் கதை முதல் பாகத்தில் தொடர்ச்சி அல்ல.. புதிய திரைக்கதை என்று படத்தின் இயக்குநர் எழில் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.