அன்றைய நாட்கள்
அழுது முடித்தவர்
சாய்ந்து விழுந்தார்
நிலத்தில் களைத்து.
அழுதழுது அவர்கள்
களைத்து விழுந்தும்
எழுந்த போது மீண்டும்
அழுது கொண்டனர்.
நல்லூர் வீதியில்
ஒரு உயிர் பிரிகிறது
தான் இதுவரை இருந்த
அந்த உடல் விட்டுத்தான்.
உண்மையாக ஒரு
விடுதலை கேட்டு.
போலியாக தரவிருந்த
விடுதலையை மறுத்து.
உடல் உருகி அவர்
ஊண் காய்ந்து சாக
ஊரே கூடி வந்து
மனமுருகி அழுதது.
போராட்ட இலட்சியம்
மாறாத போதும் ஆங்கே
போரிடும் வடிவங்கள்
சூழலால் மாறிப் போகலாம்.
இலக்கு ஒன்று தான்
என்று தானும் அது
மாறிப் போகாது தமிழரிடை.
சுதந்திர வாழ்வன்றி வேறேது?
தனி நாடு அது தான்
தீர்வு நமக்கென்று.
தமிழீழம் காண போராடு.
வேறு வழி இல்லை .
தனித்து வாழ்ந்திட நமக்கு
இடர் தந்து போவாரை
தடுத்து நலமே நாம்
தினம் மண்ணில் வாழ்ந்திட.
தீர்வது கேட்டு நடந்த
நெடுநீள பாதையில்
தீர்மானம் இதுவென
உறைக்கச் சொன்னார்கள்.
பார்த்தீபனும் களமாடி
செந்நீர் காய இருந்தார்
உண்ணா நோன்பு தான்.
அகிம்சை வழியில்.
ஏமாற்றிய தேசம்
தோசம் என்றாகி நாளும்
நீண்டு போகிறது.
எதிரியோடு கைகோர்த்து.
ஆயுதம் தாங்கியும்
போரிட தெரியும்.
அகிம்சை வழியிலும்
வாதிடத் தெரியும்.
ஆனபோதும் இன்றளவும்
புரிந்திட போரிடத் தான்
முடிந்ததில்லை தமிழர் நமக்கு.
புரிந்திட முனைந்திடுவோம்.
முப்பதேழாண்டு முடிந்தது
முடிவுகள் தீர்வுகளாய்
இன்றளவும் கிடைத்ததில்லை.
காலம் நீண்டது கனிந்திட.
நினைவுகளை மறந்திட
அடுத்த சந்ததி வந்திடும்.
சொல்லி வைத்து விடுங்கள்
கடந்த கால வரலாறை.
நின்று நிலைத்து நாம்
தொன்று தொட்டு வாழ்ந்திட
நம்மிடம் இருப்பது ஒன்றேதான்
கடந்த கால நினைவுகள்.
தீபமாகிய திலீபனின்
உன்னத தியாகம் வீசும்
காலமெல்லாம் இருளோட்டும்
ஒளியாகி தமிழர் தேசத்தில்.
நதுநசி