இதுதான்
இனி
இதுதான்
எமது வரலாறு!
அண்ணை*
தமிழ்
தாய்
தந்தை
எமது குடும்பம்!
ஈழம்
இமயம் ஆயிடை
தமிழ் கூறு நல்லுலகு
எமது தேசம்!
வில்
மீன்
புலிக்கொடி
கொண்டது
எமது தமிழ்க்குடி!
வெட்சி
வாகை
உழிஞை
தும்பை
செங்காந்தள்
மார்பணிதல்
எமது மரபு!
அகம்
புறம்
வள்ளுவம்
பிரபாகரம்!
எமது இலக்கியம்!!
பறை
முழவு
முரசு
குழல்
யாழ்
உறுமல்!
எமது இசை!!
சோழ
சேர
பாண்டிய
பல்லவ
பிரபாகர குலம்!
எமது குலம்!!
தஞ்சை
வஞ்சி
மதுரை
காஞ்சி
கிளிநொச்சி
எமது தலைநகரம்!!
எண்ணிலாச்
சிறப்புகள்
சொல்லலாம்
இன்னும்!
எல்லாச் சொற்களும்
உன் பெயர்
குறிக்கும்!
உன் பெயர்
குறிக்கும்
சொற்களும் கூட
எதிரியை எரிக்கும்!
நாற்புறமும்
கடல் சூழ்ந்த தீவு
நிலப்பரப்பை
தீபகற்பமாய் திருத்தி
திசைகள் மூன்றும்
தெற்கே திரும்ப
திக்குகள் யாவும்
திடுக்’கென நோக்க
இயற்கையே
வியக்க
செயற்கரிய செய்த
தலைவ!
ஒரு கவிதை
தாங்குமா-உன்
புகழ்பிறப்பை?
அழுது அழுது
உலர்ந்த இனத்தை
உழுது உழுது
மலர்த்திய
கலப்பை!
தமிழர்
தன்மானக்
கருப் பை!
நீயே
உலகுக்கு
உணர்த்தினாய்
தமிழரின்
இருப்பை!
நீ
நிமிர்ந்து நடந்த
ஐந்தரை அடி
திருக்குறள்!
எதிரியை
அதிரவைத்த
புலிக்குரல்!
ஏன்
திருப்பி அடிக்கவில்லை?
நான்கு வயதில்
உன் நா
எழுப்பிய கேள்வி!
உன்னால் தான்
உலகையே எழுப்பியது
தமிழீழ
விடுதலை வேள்வி!
வல்வெட்டித்துறை மண்ணை
தொட்டுப் பூசிக்கொள்ள
துடிக்கிறது
என் நெற்றி!
தாய்மண் அடைவதே
தமிழனின்
வெற்றி!
வணங்காமண்
வன்னியை நோக்கி
வணங்குகிறேன்
நான்!
உன்னை
வணங்குவதும்
தமிழ் மண்ணை
வணங்குவதும்
ஒன்றென
இடித்து முழங்குகிறது
வான்!
ஆயிரம் ஆண்டுகள்
அடங்கிக் கிடந்தது
குனிவு!
உன் பிறப்பால்
வெடித்துச் சிதறியது
அந்த இழிவு!
உன்னால் தான்
நிமிரப் பழகியது
நமது சனம்!
தமிழன்
எங்கு சென்றாலும்
உலகம் சொன்னது
இவன்
பிரபாகரன் இனம்!
நீதான்
வரலாறை மாற்றினாய்!
நீயே
வரலாறாய் மாறினாய்!
தோளில்
துவக்கு ஏந்தவும்
தோட்டா
நெஞ்சில் தாங்கவும்
துணிந்து சொல்கிறேன்!
நீ
கரிகாலன்
ராசராசன்
எல்லாளன்
பாயும்புலி
பண்டாரக வன்னியன்
அம்சம்!
நாங்கள்
உனது வம்சம்!
இதுதான்
இனி
இதுதான்
எமது வரலாறு!!
*அண்ணை–.
அண்ணன்.
-பாலமுரளிவர்மன்