இலங்கைத் தமிழரும் மலேசிய செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், தனது 86ஆவது வயதில் காலமானார்.
உலகின் 100 பணக்காரர்களில் ஒருவரான இவர், மலேசியாவில் இயங்கும் பெரிய நிறுவனங்களின் அதிபதியாவார்.
மலேசியாவின் அடையாளமாக திகழும் பாரிய வர்த்தக கட்டிடமான இரட்டை கோபுரமான பெட்ரோனஸ் டவர்ஸ் சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன்.
அத்துடன், மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Bhd இவருக்குச் சொந்தமானது.
Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடக நிறுவனத்தை அவர் தோற்றுவித்தார்.
இவரது பெற்றோர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மனைவி தாய்லாந்து நாட்டவர்.
மலேசியாவில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடங்கியவர். பின்னர் கோலாலம்பூர் விக்டோரியா கல்வி நிலையத்தில் படித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
ஆனந்த கிருஷ்ணனுக்கு அவருக்கு 3 பிள்ளைகள். இரண்டு மகள்கள். அவருடைய ஒரே மகன் வென் அஜான் ஸ்ரீபன்யோ (Ven Ajahn Siripanyo) தாய்லாந்தில் புத்தப் பிக்குவாக இருக்கிறார்.