சென்னையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. வெள்ளம் காரணமாக கடினமாகியுள்ள பயணவழியை கருத்தில் கொண்டு உணவு மற்றும் மருந்து பொருட்களை இந்தியாவில் சென்று கொள்வனவு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் துன்பத்தில் இருந்தபோது எமக்காக துடித்த எம் தமிழக உறவுகளின் அவல நிலையை கருத்தில்கொண்டு எம்மாலான பங்களிப்பினை செய்ய உள்ளதாக யாழ்பாணம் ரொட்டரி கலக்கம் தெரிவித்துள்ளது.
பணரீதியான பங்களிப்புக்களை நிவாரண நிதிக்கென திறக்கப்பட்டிருக்கும் கீழுள்ள வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு வைப்புச்செய்து உதவுவோமாறு கேட்கப்பட்டுள்ளது